புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் இன்று தொடங்கியது. மகாகவி சுப்ரமணிய பாரதியின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவரது உரை நீடித்தது.
Advertisment
அவரது உரையில், புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டை நடத்தியதை பெருமையாக நினைக்கிறேன் என்றும், புதுச்சேரியின் தனிநபர் வருவாய் 2021-22ல் ரூ. 2.14 லட்சமாக இருந்தது, இது 2022-23ல் ரூ.2.22 லட்சமாகியுள்ளது. இது 3.51 விழுக்காடு அதிகம் என தெரிவித்தார். 2023 -24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ.11.500 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், சமூக முன்னேற்ற குறியீட்டில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளதாக உட்பட புதுவை அரசின் பல்வேறு சாதனைகளை கூறினார்.
அனைத்து விதங்களிலும் புதுச்சேரி நன்கு முன்னேறி வருகிறது, சமூக பொருளாதாரத்தில் முன்னேறி, வறுமையை போக்குவதில் அரசு உறுதியாகவுள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் நிதியை பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை போக்கியுள்ளது" என தமிழிசை தனது உரையில் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம் மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தயாளன் பூங்குத்து கொடுத்து வரவேற்றனர். தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் ந. ரங்கசாமி அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர், துணை சட்டப்பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“