Advertisment

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க போராட்டம்: எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிக தாமதமாக நடைபெறுவதை கண்டித்து நேரு எம்எல்ஏ, மற்றும் மனித நேய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் சார்பில் நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
mla Nehru

mla Nehru

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிக தாமதமாக நடைபெறுவதை கண்டித்து நேரு எம்எல்ஏ, மற்றும் மனித நேய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் சார்பில் நேற்று தலைமை செயலகத்தை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

அப்போது அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியக்கடை உதவி ஆய்வாளர் வீரபத்திரன் மற்றும் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள்  கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் கடற்கரை சாலையில் இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.  இதனையடுத்து நேரு  எம்எல்ஏ, லோகு அய்யப்பன், அழகர், ராஜா  உள்ளிட்டோர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது தலைமை செயலர் கம்பன் கலையரங்கில் நடைபெற்ற  விழாவில் கலந்துகொண்ட தகவல் நேரு எம்எல்ஏ விற்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், நேரு எம்எல்ஏ தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் கம்பன் கலையரங்கம் சென்றார்.

அவர் வருவதை அறிந்த ஒதியஞ்சாலை உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் கம்பன் கலையரங்கத்தின் வாயிற்கதவை இழுத்து மூடினர். ஆயினும் நேரு எம்எல்ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கத்தினுள் சென்று விழா நடைபெற்ற மேடையின் கீழ் நின்று தலைமை செயலரை கண்டித்து கோஷமிட்டார்.

இதனையடுத்து கேட் ஏறி குதித்து, தலைமை செயலரை கண்டித்து கோஷமிட்ட நேரு எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கோ கணபதி அவர்களின் அறிக்கை...

ஓதியஞ்சாலை காவல் நிலைய  ஆய்வாளர் திரு கண்ணன் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை புதுச்சேரி மாநில பாமக வன்மையாக கண்டிக்கிறது..

புதுச்சேரி மாநிலத்தில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் நகரப் பகுதியில் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து தலைமைச் செயலாளரை அவருடைய அலுவலகத்தில் சந்திக்க முடியாத சூழலில் கம்பன் கலையரங்கில் நடைபெற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பினார்கள். அவர் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல். தலைமை செயலாளர் அதிகார ஆணவத்தில் ஒதியஞ்சாலை காவல்துறை ஆய்வாளர் திரு கண்ணன் அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.. ஜனநாயக நாட்டில் அதிலும் குறிப்பாக புதுவை  மாநிலத்தில் சாதாரண பொதுமக்கள் கூட  தவறுகள் நடக்கின்ற பொழுது அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி துறை அமைச்சராக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி கேள்வி கேட்பது அவருடைய கடமை, அவற்றுக்கு உரிய விளக்கங்கள் அளித்து அவர் சுட்டிக்காட்டுகின்ற குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது அரசின் கடமை. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்ற குறைகளை சரி செய்ய வேண்டும்.அதை விட்டுவிட்டு அந்த கூட்ட அரங்கில் காவல்துறை கண்காணிப்பாளர் சுவாதி சிங் ஐபிஎஸ் அவர்கள் இருந்தார்கள் அவர்கள் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக சட்டமன்ற உறுப்பினரை வெளியேற்ற ஆணை இடவில்லை.

காவல்துறை ஆய்வாளர் திரு கண்ணன் அவர்கள்  இட்ட பணியில்  கம்பன் கலையரங்க வாயில் கதவை திறக்காமல் கடமையை செய்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாயில் கதவு மேல் ஏறி தன்னுடைய உரிமையை கேட்க சென்றார்கள். அப்பொழுது உடனிருந்த எஸ் பி சுவாதி சிங் அவர்களையும் பணியிடை நீக்கம் செய்யாமல் ஆய்வாளரை மட்டும்  பணியிடம் நீக்கம் செய்யப்பட்டது. ‌ தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டி ஜி பி ஆகிய வடமாநில அதிகாரிகள் இணைந்து . புதுவை மாநில அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கமாக நாங்கள் என்னுகிறோம். உடனடியாக முதல்வர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் தலையிட்டு. ஆய்வாளர் அவர்களின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்து. சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அழைத்து அவர் சுட்டிக் காட்டுகின்ற முறைகேடுகளை உடனடியாக கலை வேண்டும். இல்லை என்று சொன்னால் பாட்டாளி மக்கள் கட்சி நேரடியாக இந்த பிரச்சனையில் களமிறங்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment