புதுச்சேரியில் இன்று தொடங்கியது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. புதுச்சேரி, காரைக்காலில் 14,951 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரியில் இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய தேர்வை புதுச்சேரி, காரைக்காலில் 14,951 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 82 அரசு மற்றும் 147 தனியார் பள்ளியைச் சேர்ந்த 12,972 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
காரைக்கால் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளியைச் சேர்ந்த 1,979 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரி பகுதியில் 38 இடைநிலைத் தேர்வு மையங்களிலும், காரைக்கால் பகுதியில் 13 இடைநிலைத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் எவரும் செல்போன் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் அசம்பாவதி சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"