பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
இயல், இசை, நாடகம், நடனத்தில் சாதித்த 216 கலைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை – முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து கலைமாமணி விருது இன்று வழங்கினார்கள்
புதுவை அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த 1997 ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படும் கடந்த 2016ம் ஆண்டு 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது 2013 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு காண கலைமாமணி இன்று மாலை வழங்கப்பட்டது. விருதுக்கு உரிய்வர்களை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் கடந்த 24ந் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெறப்பட்ட 743 விண்ணப்பங்களில் 216 கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இயல் பிரிவில் நாராயணசாமி, ராமலிங்கம், நமச்சிவாயம், பாஞ்.ராமலிங்கம், பூபதி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 44 பேரும் இசை பிரிவில் கந்தசாமி, அன்னபூரணி, தமிழரசன், ராஜரத்தினம், ஜெயா, தருமு, ராஜ்முகில் உள்ளிட்ட 38 பேரும் நாடகப் பிரிவில் முனுசாமி, ஏழுமலை, கலியபெருமாள், ஜெயபாலன், ஆனந்த கிருஷ்ணன், நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 39 பேரும் நடனப்பிரிவில் ரகுநாத், ராகினி, ஸ்ரீனிவாஸ், சங்கீதா தாஸ், ரஷ்யா, தலியா சகாயராஜ், ஆனந்த பால யோகி பவானி உள்ளிட்ட 21 பேருக்கும் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் ஓவியம் மற்றும் சிற்ப பிரிவில் சுப்பிரமணியன், அழகுமுத்து, மாசிலாமணி, காந்தா, ராஜராஜன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 35 பேருக்கும் நாட்டுப்புறக் கலை பிரிவில் வீரப்பன், கலியமூர்த்தி, காத்தமுத்து, சாமிகண்ணு, முத்துலிங்கம், ஞானமூர்த்தி உள்ளிட்ட 38 பேருக்கும் என மொத்தம் 216 பேருக்கு கலைமாமணி விருது இன்று புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர்களால் வழங்கப்பட்டது
இதற்கான விழா இன்று (சனிக்கிழமை) மாலை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது விழாவில் கவர்னர் தமிழிசை முதல அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
விழாவில் சபாநாயகர் செல்வம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 2022 மற்றும் 2023ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூன் 1ந் தேதி முதல் கலைப் பண்பாட்டு துறையில் வழங்கப்படுகிறது ஏற்கனவே விண்ணப்பம் அளித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ் தொண்டிற்கான தமிழ்மாமணி விருது, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் கம்பன் புகழ் பரிசு, தொல்காப்பியர் விருது சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு ஆகியவற்றிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“