பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
சுதந்திர தினத்தையொட்டி நாளை முதல் மூன்று நாட்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில், நாட்டின் அடையாளமாக விளங்கும் தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் 'தேசம் போற்றுவோம், வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம்' நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அதன்படி, வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசியக்கொடியை பொதுமக்கள் ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் டூவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து இன்று 12ம் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil