காரைக்காலில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி தலைமையில் இன்று (12.10.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்டிடத்தின் மாதிரி வரைபடங்கள், ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேசிய கட்டிட கட்டுமான கழகத்தைச் (National Building Construction Corporation) சார்ந்தவர்கள், காரைக்கால் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான மாதிரி வரைபடங்களைக் காட்டி விளக்கிக் கூறினர். இதற்கான நிதி மற்றும் ஒப்புதலுக்காக, இதன் அறிக்கை மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.
இந்தநிகழ்வின் போது, பொதுப்பணித் துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன், அரசு கொறடா PV. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர்கள் AMH நாஜிம், PRN திருமுருகன், S. ரமேஷ் (எ) K.S.P., U. லட்சுமிகாந்தன், P.R. சிவா, அரசுச் செயலர் (சுகாதாரம்) பங்கஜ் குமார் ஜா, சுகாதாரத் துறை இயக்குநர் Dr. G. ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“