Puducherry CM Rangasamy Meet actor Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் புதுவை முதல்வர் ரஙகசாமி சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நகர்புற உள்ளாடசி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள திமுக இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது பலத்தி நிரூபிக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதே சமயம் ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக உள்ள அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட வியூகம் அமைத்து வருகிறது. இதில கூட்டணி கட்சியினா பாமக மற்றும் பாஜக என இரணடு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால், அதிமுகவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதற்கிடையே முன்னணி நடிகரான விஜயின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டமக்கள் இயக்கம் 100-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் கவனம் பெற்றுள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே நடைபெற்றதாக முதல்வர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு வரும் நிலையில், இந்த போட்டி அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருதற்காக முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “