Puducherry News in Tamil: புதுச்சேரியில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து ஜாமீன் வெளியிட்டனர். அவர்கள் சண்டைக்கு பயன்படுத்திய சேவல்களை போலீசார் கைது செய்து கடந்த 5 நாட்களாக காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர் நாளை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர். உரிமையாளருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சேவல்களுக்கு ஜாமின் வழங்கினால் மட்டுமே விடுவிக்கப்படும் என போலீசார் கரார்.
புதுச்சேரி தேங்காய்திட்டில் பொங்கல் பண்டிகையன்று பந்தையம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. முதலியார்பேட்டை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது திலகர் நகரை சேர்ந்த சின்னதம்பி, பிரதாப் ஆகியோர் சேவல் பந்தையம் நடத்தியது தெரியவந்தது. சண்டையில் எந்த சேவல் ஜெயிக்கும் என கேட்டு பந்தையமாக பணம் வைத்து ஒரு கூட்டமே விளையாடியது தெரியவந்தது. போலீசாரை கண்டவுடன் அனைவரும் தப்பி ஓடினார்கள். இருப்பினும், பந்தையம் நடத்திய சின்னதம்பி, பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் சேவல்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 5 நாட்களாய் அவை முதலியார்பேட்டை காவல் நிலைய நுழைவு வாயிலில் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களாய் ஜாவா, கலிவா, கதிர், யாகத் ஆகிய பெயர்களை கொண்ட சேவல்களூக்கு நீரும் தீனியும் வைத்து பராமரித்து வருகின்றனர். காரணம் வழக்கு முடியும் வரை சேவல்களை பராமரிக்க வேண்டியது போலீசாரின் பொறுப்பு.

செய்தி: பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil