/indian-express-tamil/media/media_files/2025/01/21/G5tAKhkPliPJjkz3AJPv.jpg)
புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார் பெறவில்லை? என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு, சட்டமன்றம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மகிளா காங்கிரசார் அறிவித்திருந்தனர்.
இதற்காக ஆம்பூர் சாலை அருகே துணைத் தலைவி நிஷா தலைமையில் மகிளா காங்கிரசார் ஒன்று கூடினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/21/Y2X93sGElpZvvzf9mrw0.jpeg)
ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், வக்கீல் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், நிர்வாகிகள் ரகுமான், தனுசு உட்பட பலர் பங்கேற்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/21/gtfhvJcHXUAwR60NXBtF.jpeg)
போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரசார் திடீரென அங்கிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சட்டமன்ற பாதுகாவலர்கள் நுழைவுவாயிலை மூடினர். அப்போது அங்கு வந்த மகளிர் காங்கிரசார், முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக கூறினர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/21/TAmk53wzdmQ1m54IqtgF.jpeg)
அவர்களை பாதுகாவலர்கள் அனுமதிக்க மறுத்ததால், நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இன்னும் சிலர் கேட்டை தள்ளியும், அதன்மீது ஏறியும் குதிக்க முயன்றனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் பெண் காவலர்களுடன் அங்கு குவிந்தனர். மகளிர் காங்கிரசார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக அங்கிருந்து போலீஸ் வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் முதலமைச்சரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். இதனால் சட்டசபை முன்புறம் அரைமணி நேரம் பரபரப்பு நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us