கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி: புதுச்சேரியில் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடித்து கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏ!

புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்ததாதல், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டுமென திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்ததாதல், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டுமென திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
DMK Puducherry
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 58 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளி எதிரே மளிகை கடை மற்றும் வீடுகளில் கள்ளச்சாராயம் பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த நபர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கையும் களவுமாக பிடித்து காவல்துறையுடம் ஒப்படைத்தார்.

Advertisment

கள்ளக்குறிச்சியி விஷச்சாராயம் அருந்தியதில் 55-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தி சென்ற புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் புதுச்சேரியில் இருந்துதான் தமிழகத்தற்கு கள்ளச்சாராம் கடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதேபோல் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்ததாதல், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டுமென திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் தனக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை வேல்ராம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் சாராயம் விற்பது போன்ற வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சாலைப்பணிகளை ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டு, போலீசாருடன் வேலாரம்பட்டு ஏரிக்கு செல்லும் மாரியம்மன் கோயில் தெருவுக்கு சென்றார்.

Advertisment
Advertisements

அங்கு ஒரு வீட்டையொட்டிய பகுதியில் மூட்டையில் கள்ளச்சாராயப் பாக்கெட்டுகள் இருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடிமகன்கள் சாராயம் அருந்தும் இடமும் அங்கு இருந்தது. அடுத்து அருகேயிருந்த மளிக்கைக்கடையில் பாட்டில் சாராயம், அருகேயிருந்த வீட்டில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றையும் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தியை போலீசார் பிடித்தனர். மேலும் கடைக்கு வெளியே இருந்த டூவீலரின் இருக்கைப் பகுதியை தூக்கி பார்த்தால் அங்கு சாராய பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து சுமார் 50,000 மதிப்புள்ள கள்ளச்சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சக்கரவர்த்தி மற்றும் அவரது மகன் ராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கூறுகையில்,

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் அதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று தனது தொகுதி மக்கள் மீது அக்கறை கொண்டு அறிவுருத்தி வந்த நிலையில், தற்போது சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இந்த சாராயம் எங்கிருந்து வந்தது? யார் விற்பனை செய்கிறார்கள்? என்று விசாரணை செய்து சாராயம் எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டதோ அந்த கடைக்காரரை கைது செய்து அவர்களைகைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Puducherry Kallakurichi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: