தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான ஆயத்த பணியகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையங்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த மாதம் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல்காந்தி தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இதற்காக இன்று புதுச்சேரி வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து மீனவ கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும், அடுத்த முறை புதுச்சேரி வரும்போது மினவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது பற்றி தெரிந்துகொள்ள வீரும்புகிறேன் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாரதிதான் கல்லுரி மாணவிகளுடன் உரையாடலில் கலந்துகொண்ட ராகுல்காந்தி அதனைத் தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. நாங்கள் இப்படியேதான் இருக்கிறேம். முதல்வர் நாராயண சாமி கூட எங்களை கண்டுகொள்வதில்லை என்று குறை கூறினார். ஆனால் மக்களின் பேச்சை ராகுல்காந்திக்கு மொழிபெயர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்கள் தன்னை குறை கூறியதை மறைத்து தனக்கு சாதகமாக ராகுலிடம் மொழபெயர்த்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.