வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மீனவர்கள் வரும் 27, 28 ஆகிய 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
புதுச்சேரி மீன் வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 27 ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து 29 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிய வருகிறது.
எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“