பா.ஜ.க-வினரை பார்த்தால் ஒதுங்கி செல்லுங்கள் என்று காங்கிரஸ் தீ பந்த பேரணியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடிக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி உசுடு தொகுதி காங்கிரஸ் சார்பில் பாஜகவை கண்டித்து சத்யா கிரக போராட்டம் பத்துக்கண்ணு 4 முனை சந்திப்பில் இன்று நடைபெற்றது.
உசுடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற சத்யா கிரக போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம். எல். ஏ, முன்னாள் அரசு கொறடா ஆனந்த ராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், “பாராளுமன்றத்தில் அதானி குறித்த கேள்விக்கு நரேந்திர மோடி பதிலளிக்காமல் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். இதுவரை ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதில் இல்லை காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் மோடியின் அரசை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
மேலும், பா.ஜ,க மோடி அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.
பாஜகவில் சேர்ந்தால் கொலை செய்யப்படுவீர்கள்.. குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் – நாராயணசாமி பேச்சு
பா.ஜ.க-வினரை பார்த்தால் ஒதுங்கி செல்லுங்கள்…. என்று காங்கிரஸ் தீ பந்த பேரணியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பேரணியின் முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்று புதுச்சேரி வில்லியனூர் வட்டார காங்கிரஸ் சார்பில் பாஜகவை கண்டித்து தீப்பந்த பேரணி நடைபெற்றது.
மங்கலம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற பேரணி வில்லியனூர் கோட்டைமேடு விவேகானந்தா அரசு பள்ளி அருகில் இருந்து புறப்பட்டது.
இந்த பேரணி மார்க்கெட் வழியாக வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலை வந்து அடைந்தது.
பேரணியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம். எல். ஏ, உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் தீப்பந்தங்கள் ஏந்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பேரணி முடிவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி:
அதானி பற்றி கேள்வி எழுப்பிய ஒரே காரணத்துக்காக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறினார்.
மேலும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள ரங்கசாமியும் ஜனநாயக விரோத ஆட்சியை புதுச்சேரியில் நடத்தி வருகிறார் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று குறிப்பிட்ட அவர்.
காங்கிரஸ் நிர்வாகிகளை பார்த்து யாரும் பாஜகவில் சேராதீர்கள் அப்படி சேர்ந்தால் கொலை செய்யப்படுவீர்கள்.
உங்களது குடும்பம் நடு தெருவில் நிற்கும்… எனவே பாஜகவினரை பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒதுங்கி செல்லுங்கள்…துஷ்டரை கண்டால் தூர விலகுங்கள் என்று பேசினார் இந்த பேச்சு அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசிக் கொண்டிருக்கும் போது வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி திடீரென மயங்கினார் அப்போது அப்போது அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தேற்றினார்.
இதனை அடுத்து அங்கிருந்து தொண்டர்கள் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”