/indian-express-tamil/media/media_files/Pmsw5Uiy6DzLpkdAvMjZ.jpeg)
பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் ஐ.ஜி; சூடுபிடித்த தேர்தல் களம்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க வேட்பாளரை களம் இறக்கவுள்ள நிலையில், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி சந்திரன் இன்று பா.ஜ.க.,வில் இணைந்தது புதுச்சேரி தேர்தல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடவுள்ளார். வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. ஓரிரு நாளில் பா.ஜ.க வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான சந்திரன் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பா.ஜ.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சந்திரன் கடந்த 34 ஆண்டுகளாக புதுச்சேரியில் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி.,யாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலஙகளிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையில் உயரதிகாரியாக பணியாற்றியவர், தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளராகவும் பல மாநிலஙகளில் பணியாற்றியுள்ளார்.
பா.ஜ.க மக்களவை தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி சந்திரனை கட்சியில் சேர்த்துள்ளதால், புதுச்சேரி தேர்தல் களம் பரபரப்படைந்து வருகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.