Advertisment

ஜி20 அறிவியல் மாநாடு; ஆரோவில் பகுதியைச் சுற்றிப் பார்த்த வெளிநாட்டு பிரதிநிதிகள்

பல தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாக்கங்களை நமது சொந்த நாட்டிலும் நாட்டின் எல்லையை கடந்து உலக அளவிலும் முன்னெடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம் – ஜி20 அறிவியல் மாநாட்டில் இந்தியத் தலைவர் பேச்சு

author-image
WebDesk
New Update
ஜி20 அறிவியல் மாநாடு; ஆரோவில் பகுதியைச் சுற்றிப் பார்த்த வெளிநாட்டு பிரதிநிதிகள்

புதுச்சேரி ஜி20 அறிவியல் மாநாடு

ஜி20 அறிவியல் மாநாடு இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாடு இன்று பிற்பகல் உடன் முடிவடைகிறது. அதன் பின்பு 11 நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் ஆரோவில் பகுதியைச் சுற்றிப் பார்த்தனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் ஆரோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Advertisment

புதுச்சேரியில் சுகன்யா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நேற்று ஜி20 அறிவியல் மாநாடு தூங்கியது இந்த மாநாட்டில் சுற்றுப்புற சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் மையமாகக் கொண்டு மிக அதிகமாக கருத்துக்கள் பகிரப்பட்டது. இந்த மாநாட்டிற்கு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் வரவேற்புரை ஆற்றினார். இன்று இந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் தனது கருத்துக்களை தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.

publive-image

புதுச்சேரி ஜி20 அறிவியல் மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதிநிதிகள்

இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடக்கம்; 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

அறிவியல்-20 இன் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா பேசுகையில், ஜி20 அறிவியல் கூட்டம் புதுச்சேரியில் தொடங்கி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. மொத்தம் ஐந்து கூட்டங்கள் நிறைவுக்கு பிறகு, அதாவது ஜூலை மாதத்திற்கு பிறகு நாடுகளுக்கு பொருத்தமான சிறந்த நடைமுறைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு ஜி20 குழு தனது அறிக்கையாக அளிக்கவுள்ளது.

publive-image

புதுச்சேரி ஜி20 அறிவியல் மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதிநிதிகள்

அழகான புதுச்சேரி நகரில் நடைபெறும் அறிவியல்-20 ஆரம்ப நிலைக் கூட்டத்தில் ஜி20 நாடுகளின் விஞ்ஞானிகள், பல்வேறு இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் அன்புடன் கலந்து கொண்டனர். உலக அளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மதிக்கின்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமை மிக்க நிகழ்ச்சியாக உள்ளது. அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

publive-image

புதுச்சேரி ஜி20 அறிவியல் மாநாடு

”அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைக்கினறன் மற்றும் அமைதியை முன்னெடுக்கின்றன” என்று பிரதமர் நரேந்திர் மோடி கூறியுள்ளார்.  அறிவியலின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு பிரதமரின் கூற்றுக்கு அணி சேர்ப்பதோடு உலகத்தின் எதிர்கால நம்பிக்கைக்கும் வழிவகுக்கின்றது. பல தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாக்கங்களை நமது சொந்த நாட்டிலும் நாட்டின் எல்லையை கடந்து உலக அளவிலும் முன்னெடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நாம் எதிகாலம் குறித்தும் விவாதிக்க உள்ளோம் என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா பேசினார்.

publive-image

ஜி20 அறிவியல் மாநாட்டின் இந்தியத் தலைவர் அஷுதோஷ் ஷர்மா

மேலும், இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சியின் வசதிகளைப் பெற்று வளர்கின்ற தலைமுறையாக உள்ளது. இளைஞர்களின் எண்ணணிக்கை மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கின்றது.  இன்று பிறக்கின்ற குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறந்தவர்கள், எனினும் எதிர்கால தலைமுறைக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்க்கையும் டிஜிட்டல் மயமாகின்றது. ஆனாலும் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகின்றன. இங்கு முன்வைத்துப் பேசுகின்ற பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் தொழில் நுட்பம் என்பது புதிய தீர்வுகளைத் தரக்கூடியது,. இன்றைய ஆரம்ப நிலைக் கூட்டத்தின் இலக்கு என்பது இனி தொடர்ந்து நடைபெறக்கூடிய கூட்டங்களுக்கான கருத்துவரைவை உருவாக்குவதுதான். அறிவியல் உச்சிநிலை கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. பல்வேறு அமர்வுகளாக கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுகிறது, என்றும் அவர் கூறினார்.

publive-image

G20 மாநாட்டை முடித்து கொண்டு ஆரோவில் பகுதியை சுற்றிப்பார்க்க சொகுசு பேருந்தில் வந்தடைந்தனர் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்

இன்று பிற்பகலில் அனைத்து உறுப்பினர்களும் ஆரோவில் பகுதியை சுற்றிப் பார்த்தனர். மேலும் ஒரு சில பிரதிநிதிகள் புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu India Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment