/tamil-ie/media/media_files/uploads/2023/01/G20-Puducherry.jpeg)
ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது.
2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. அந்தவகையில் இன்று புதுச்சேரியில் ஜி20 மாநாட்டிற்கான கருத்தரங்கம் இன்று துவங்கியது. இதில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: அறிவியலின் வளர்ச்சியால் உலகில் வறுமை குறைந்துள்ளது – ஜி20 அறிவியல் மாநாட்டிற்கான இந்திய தலைவர்
இந்தக் கூட்டத்தில் இந்தியா, கடந்தாண்டு மாநாடு நடத்திய இந்தோனேஷியா, அடுத்தாண்டு நடத்த உள்ள பிரேசில் ஆகியவை தலைமை உரையாற்றுகின்றனர். தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் தலைமையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-30-at-13.45.16.jpeg)
மாநாட்டையொட்டி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் அமைந்துள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்கள் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் விடுதியின் முன்பகுதியில் புதுவையின் அடையாளமான ஆயி மண்டப கட்டிடவடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 10 அடி உயரத்தில் ஆயி மண்டபம், பிரதமர் உருவ மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி நகரம் பொலிவுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-30-at-13.45.16-1-1.jpeg)
புதுச்சேரியைத் தொடர்ந்து, அகர்தலா, பங்காரம் தீவு, போபால் ஆகிய இடங்களிலும், இறுதிக் கூட்டம் கோவையிலும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.