புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது இல்லை: உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழிசை
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது இல்லை என புதுச்சேரி கவர்னர் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisment
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்ட வளாகமாக துணைநிலை ஆளுநர் மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான உறுதி மொழியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தட்டுகள் போன்றவற்றைத் தவிர்த்து அதற்கு பதிலாக துணிப்பை, காகிதப்பை, சணல்பை, சில்வர் பொருட்கள் போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
Advertisment
Advertisements
மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத புதுச்சேரியை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள தடை ஆணையை மதிக்கவும் புதுச்சேரி அரசின் நோக்கத்திற்கு ஆதரவாக இருக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil