பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டை நாத சுவாமி தேவஸ்தானம் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கோயில் அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு திருக்கயிலை பரம்பரை தருமை ஆதீனம் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த கவர்னர் தமிழிசை கூறுகையில்,
ஆன்மீகமும் தமிழும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தோடு கூடிய தமிழை இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும் தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சில பேர் பேசி வருகிறார்கள் அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள் தமிழோடு சேர்ந்து ஆன்மீகம் தழைக்கும். தமிழும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்ற எண்ணம் இன்னும் அதிகமாக விதைக்கப்பட வேண்டும்
கவர்னர் அவரது கருத்தை சொல்கிறார். அதற்கு கருப்புக் கொடி காண்பிப்பது தவறு. எல்லோருக்கும் தமிழகத்தில் சென்று வருவதற்கு உரிமை உள்ளது. அவரவர்கள் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆன்மீக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்பொழுது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது. முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அதிகார வெறி பிடித்து அலைகிறேன் என்று என்னை கூறுகிறார் எனக்கு எங்கேயுமே வெறி பிடிக்கவில்லை.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கவர்னர் வெளியேற வேண்டும் என்ற சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை கொரோனா நேரத்தில் புதுவை மக்களுக்காக அந்த அளவிற்கு சேவையற்றி உள்ளேன். என்னை எதிர்த்து போராடுபவர்களுக்கு எல்லாம் என்னிடம் சுமூகமான உறவு உள்ளது. ஓராண்டுகளில் ஆயிரத்து 500 கோப்புகளை சரி செய்துள்ளேன். 17 கோப்புகளுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளேன் மாணவர்களுக்கு லேப்டாப், மருத்துவமனையை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்திலும் முதல அமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன்.
தான்தோன்றித்தனமாக முதல் அமைச்சரையும் அமைச்சரையும் ஒதுக்கிவிட்டு கவர்னர் கையில் அதிகாரத்தை எடுத்துள்ளார் என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன். எனவே என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை.எனது பணியில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை.கவர்னர் புதுவையிலேயே எப்போதும் இருப்பதாக நாராயணசாமி கூறுகிறார். கவர்னர் புதுவையில் இருப்பது குறித்து அவர் சந்தோஷப்பட வேண்டும். எனவே என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்பது என்னுடைய கருத்து என கவர்னர் தமிழிசை கூறினார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.