பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து கேள்விக்கு.கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும் என்று பதில் சொல்ல மறுப்பு தெரிவித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது சிரித்தபடி கிண்டல் அடித்து பேசியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் யுவா சங்கமம் மேற்குவங்க மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

பிரதமர் முயற்சியினால் கல்வி அமைச்சகம் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகளை இங்கு அனுப்புகின்றனர். இது நல்ல அனுபவமாக இருக்கிறது. தெலுங்கானாவில் கூட நாளை மறுநாள் நான் மாணவர்களை சந்திக்கின்றேன். வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் போது மாநிலத்தை பற்றியும், இங்குள்ள கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொண்டு நாமெல்லாம் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
புதிய கல்வி கொள்கை வகுப்பறையில் இருந்து உலக அரங்கில் மாணவர்களை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு எவ்வளவு நன்றாக படிக்கின்ற மாணவர்கள் இருந்தாலும், உலளவில் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால் உலக அளவில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. கஸ்தூரி ரங்கன் போன்ற வல்லுநர்களால் பல லட்சம் பேரிடம் இருந்து இதுபோன்ற உணர்வுகளையும், குறிப்புகளையும் வாங்கி பெரிய குழு அமர்ந்து இந்த தேசத்துக்கு என்ன, எப்படி வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துதான் புதிய கல்வி கொள்கையை வரையறை செய்துள்ளனர்.

பல மாநிலங்களோடு நம்மை தொடர்பு படுத்துவதற்கும், நமது தாய்மொழியில் ஆரம்ப கல்வியை பெறுவதற்கும் இந்த புதிய கல்வி கொள்கை தேவைப்படுகிறது. இன்றைக்கு காலை உணவை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சில மாநிலங்கள் சொல்கின்றனர். புதிய கல்வி கொள்கையில் அது இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்தும் போது அதில் காலை உணவு குறித்து இருக்கிறது.
அதுபோல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தான் குழந்தைக்கு நல்ல எதிர்ப்பு சக்தி வரும். புதிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது. ஆரம்ப கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும், அப்போது தான் இன்னும் அறிவு வளர்ச்சி வரும் என்கிறது. கல்வித்துறையில் மேலும் பல முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு புதிய கல்வி கொள்கை மிகவும் உதவி கரமாக இருக்கிறது. புதிய கல்வி கொள்கை அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது அல்ல.
கல்வியாளர்களால் பலரின் கருத்துக்களை வாங்கி ஏற்படுத்தப்பட்டது. அதனால் இதன் நல்லவற்றை எடுத்து மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதில் கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும்.

நல்ல முயற்சிக்காகத்தான் எல்லாம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது. என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“