புதுச்சேரி அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.
மேலும், வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றால் அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“