scorecardresearch

ஜெர்மனி பெண்ணிடம் அத்துமீறல்: புதுவையில் ஹாக்கி வீரர் கைது

ஹாக்கி வீரரான இவர் புதுவைக்கு வந்து விட்டு திரும்ப சென்ற போது மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tamil News
Tamil News Updates

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜனாஸ்விங் (வயது 20). இவர் திண்டிவனத்தில் தங்கி சமூக சேவையாற்றி வருகிறார். ஜனாஸ்விங் கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் சென்றுள்ளார்.

திண்டிவனத்தில் இருந்து புதுவை பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் வந்தபோது, அவரது பின் சீட்டில் இருந்த வாலிபர் ஜனாஸ்விங்கிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து  ஜனாஸ்விங் அளித்த புகாரின் அடிப்படையி்ல் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். இதனிடையே, அந்த வாலிபர் பெங்களுரை சேர்ந்த சரத் (வயது 22) என்பதும் அங்குள்ள கல்லூரியில் எம்ஏ படித்து வருகிறார் என்பது தெரியவந்தது.

ஹாக்கி வீரரான இவர் புதுவைக்கு வந்து விட்டு திரும்ப சென்ற போது மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சரத், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry hockey player held for sexual abuse