தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“