பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது*
புதுவை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார். மீனவ மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“