Advertisment

புதுச்சேரியில் பெண்களுக்கு கொலை மிரட்டல்; சென்னை வாலிபர் கைது

புதுச்சேரி பேன்சி கடையில் பெண்களிடம் வத்திப்பெட்டிக் கேட்டு கொலை மிரட்டல்; வெளியான சி.சி.டி.வி காட்சிகள்; சென்னையைச் சேர்ந்த வாலிபர் கைது

author-image
WebDesk
New Update
puduvai fancy issue

புதுச்சேரியில் பேன்சி நகை கடை பெண்களிடம் தீப்பெட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் புதுச்சேரி பெரிய கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Advertisment

புதுச்சேரி ரெயின்போ நகர் அருகே 45 அடி சாலையில் நிவா பிரைடல் என்ற கவரிங் நகை கடை இயங்கி வருகிறது. இங்கு 3-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மது போதையில் கடைக்குள் நுழைந்த நபர், அங்கு வேலை பார்க்கும் பெண்களை பேபி என்று அழைத்து அவர்களிடம் வம்பிழுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சிகரெட்டை பற்றவைக்க வத்திப்பெட்டி தரவில்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுவதும், ஆபாசமாக கொச்சையாக பேசுவதும் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 42 வயது வாலிபர் பழனி புதுச்சேரி பெரிய கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவின் பேரில் பெரிய கடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை வாலிபரை கைது செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment