புதுச்சேரி காவல் துறையில் 253 காவலர், 26 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் காவலர் பணியிடங்களுக்கு 14 ஆயிரத்து 173 பேரும், ஓட்டுநர் பணியிடங்களுக்கு 881 பேரும் விண்ணப்பித்தனர்.
அவற்றில், ஓட்டுனர் பணிக்கு 877 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதனையடுத்து ஆண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு பெண் காவலருக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் தொடங்கியது.


தினமும் 800 பேர் வீதம் 4 நாட்களுக்கு 2,600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 279 பணியிடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய உடற்தகுதி தேர்வினை காவல்துறை தலைவர் சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“