பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுவையில் வரும் மே 1-ம் தேதி முதல் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்*
புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆய்வாளர் செந்தில், உதவி ஆய்வாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய கண்காணிப்பாளர் மாறன், வார விடுமுறை நாட்களில் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் சுற்றுலா பயணிகளிடம், புதுச்சேரியில் உள்ள ஒரு வழி சாலைகள் உட்பட போக்குவரத்து விதிகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும்,மே ஒன்றாம் தேதி முதல் உரிமம் பெற்ற கடையின் முன்பு மூன்று வாகனங்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என்றும்,சாலை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil