இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்போடு மயிலம் பொம்மபுர ஆதின மடத்திற்கு சொந்தமான 35 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 55 கோடி கோடி என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிப்பாதைகள் மடம் சார்பில் வழங்கப்பட்டது. இன்று ஐந்தாவது நாளாக வேலி போடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மயிலம் பொம்மபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான இடங்கள் பொம்மையார்பாளையம், மதுரா, குயிலாப்பாளையம், ஆரோவில் ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த இடத்தில் தான் அன்னையின் கனவு நினைவாக்குவதாக சுமார் 175 நாட்டில் இருந்து வந்து வெளிநாட்டவர்கள் இங்கு வசிக்கின்றனர் ஆரோவில் இந்த இடத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் இந்த இடத்தில் ஒரு ஏக்கர் ஒரு கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை விலை போகிறது.
பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில் மற்றும் மடத்தின் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் விளைவாக விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் உதவியாளர் விஜயராணி தலைமையில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஞானம் மற்றும் நில அளவயர்கள் முன்னிலையில் பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.


அப்போது மடத்தின் நிர்வாகிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் தலைமையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்போடு மடத்திற்கு சொந்தமான 35 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மடத்தின் நிலங்களுக்கு மடத்தின் மேலாளர் சந்தானம், மேற்பார்வையில் பாதுகாப்பான கம்பி வேலி (பென்சிங்) அமைக்கப்பட்டது. மேலும் பொம்மபுர சன்னிதானம் ஸ்ரீமத் பாலைய சுவாமிகள் அனுமதியோடு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக லட்சுமிபுரம் வழிப்பாதை, நியூ கிரியேஷன் பள்ளியிலிருந்து குடியிருப்புகளுக்கு செல்ல வழி பாதை, அரேக்கா அருகே உள்ள பகுதிகளுக்கு வழிப்பாதை, மாத்தூர் செல்லும் வழிப்பாதைகள் என 5 வழிப்பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மடத்தின் சார்பில் அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“