புதுச்சேரியில் ரூ.1000 மகளிருக்கு வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளோம். முதலில் 17 ஆயிரம் பேருக்கு கொடுத்தோம்.
இந்தத் திட்டத்தை தற்போது 77 ஆயிரம் பேருக்கு விரிவுப்படுத்தி உள்ளோம். அதாவது தமிழ்நாடு போல் சுருக்கவில்லை.
அவர்கள் நிறைய பேருக்கு அறிவித்துவிட்டு குறைவான பேருக்கு கொடுக்க உள்ளனர். ஆனால் நாங்கள் குறைவாக அறிவித்துவிட்டு நிறைய பேருக்கு கொடுக்கிறோம்.
மேலும் 50 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் நலத்திட்டத்தை தொடங்க உள்ளோம். அடுத்து கியாஸ் மானியம் ரூ.300 கொடுக்க உள்ளோம். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.100 அறிவித்துவிட்டு கொடுக்கவில்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“