/indian-express-tamil/media/media_files/2025/05/02/t1dkWa2bUf8cQVFYCV3c.jpg)
Puducherry
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற தணிகைத்தம்பி அவர்கள் தமது கல்லூரி பருவத்தில், எழுத்தாற்றல் மூலம் சமூகத்தில் நடைபெற்ற பல்வேறு பொது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்.
பின்னர் பத்திரிகை துறையில் கால் பதித்த அவர் செய்தி சேகரிப்பில் திறம்பட செயலாற்றியவர். அதுவும் புலனாய்வு கட்டுரைகளை சிறப்பாக எழுதி பெயர் பெற்றவர். செய்தியாளராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு தேசிய தலைவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில அரசில் கட்சித் தலைவர்களிடத்தில் பழகி நட்பு பாராட்ட பெற்றவர்.
புதுச்சேரி மாநிலத்தில் 1975–ல் தினமலர் நாளிதழில் செய்தியாளர் பணியை தொடங்கி பல்வேறு முன்னணி நாளிதழ்களில் சுமார் 50 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய திரு. தணிகைத்தம்பி அவர்கள், நான் முதல் முறையாக 1996–ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டபோது அறிமுகமானவர்.
அரசியல் பாகுபாடின்றி ஆலோசனைகள் வழங்க கூடியவர். புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலில் தனியார் தொலைக்காட்சி மூலம் உள்ளூர் செய்திகளை மக்கள் உடனுக்குடன் அறியும் வண்ணம் செய்த பெருமைக்குறியவர்.
புதுச்சேரி மாநிலத்தின் மூத்த பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரிய திரு. தணிகைத்தம்பி அவர்களின் இழப்பு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும். அண்ணாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று இரா. சிவா அதில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.