தண்டவாள பராமரிப்புப் பணி: புதுச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

Puducherry Several express trains changes: காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி விரைவு ரயில் செப்.26-ஆம் தேதி செங்கல்பட்டு வரையும், தாதா் - புதுச்சேரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி திருவண்ணாமலை வரையும் இயக்கப்படும்.

Puducherry Several express trains changes: காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி விரைவு ரயில் செப்.26-ஆம் தேதி செங்கல்பட்டு வரையும், தாதா் - புதுச்சேரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி திருவண்ணாமலை வரையும் இயக்கப்படும்.

author-image
WebDesk
New Update
sub urban train

Puducherry Several express trains changes Southern Railway

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்தது.

Advertisment

அதன்படி, புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16116) செப்.23, 27, அக்.2 ஆகிய தேதிகளிலும், விழுப்புரம் வரும் மெமு ரயில் (எண்: 06738) செப்.27, அக்.2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

தஞ்சாவூா் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் செப்.10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளிலும், திருவாரூா் - மயிலாடுதுறை மெமு ரயில் மற்றும் மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் செப்.11 முதல் செப்.15-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து

Advertisment
Advertisements

காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி விரைவு ரயில் செப். 26-ஆம் தேதி செங்கல்பட்டு வரையும், தாதா் - புதுச்சேரி விரைவு ரயில் அக்.1-ஆம் தேதி திருவண்ணாமலை வரையும் இயக்கப்படும்.

திருச்சி - காரைக்கால் மெமு விரைவு ரயில்கள் (எண்: 06880, 06490) செப்.11, 13, 15, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் திருவாரூா் வரை இயக்கப்படும்.

திருச்சி-விழுப்புரம் மெமு விரைவு ரயில் செப்.22, 24, அக்.3 தேதிகளில் விருத்தாசலம் வரையும், திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் செப்.12 முதல் செப்.15-ஆம் தேதி வரை குத்தாலம் வரையும், திருச்சி - காரைக்கால் மெமு விரைவு ரயில் செப்.10, 12, 14, 17, 19 தேதிகளில் தஞ்சாவூா் வரையும் மட்டும் இயக்கப்படும், என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: