/indian-express-tamil/media/media_files/2025/06/19/whatsapp-image-2025-06-19-13-23-00.jpeg)
Puducherry
புதுச்சேரியில் ஆன்மீக சுற்றுலாவை வளர்ப்பதற்கான முயற்சிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது, என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மதுரையில் முருகர் பக்தர் மாநாட்டில் கலந்து கொண்டு கூறினார்
மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் துணை நிலை ஆளுநர் K.கைலாஷ்நாதன் இன்று(19.06.2026) கலந்து கொண்டார். அங்கு நிறுவப்பட்டுள்ள ஆறுபடை வீடு முருக கடவுளை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர், ஒரு முருக பக்தனாக தன்னுடைய குலதெய்வமான முருகனை வழிபட வந்திருக்கிறேன். முருக கடவுள் பழங்காலத்தில் இருந்து தமிழர்களால் வழிபடும் கடவுளாக இருக்கிறார். உலகம் எங்கும் தமிழர்கள் முருக வழிபாட்டை கொண்டு சென்று இருக்கிறார். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த நான் குஜராத்தில் 45 ஆண்டுகளாக பணியாற்றிய போதும் முருக வழிபாட்டை இன்னும் மறக்கவில்லை. முருகன் மீது உள்ள பக்தியின் காரணமாக வந்திருக்கிறேன்.
புதுச்சேரியில் ஆன்மீக சுற்றுலாவை வளர்ப்பதற்கான முயற்சிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் பழமையான கோயில்கள் இருக்கின்றன.
சித்தர் பீடங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் இணைத்து ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறது, என்று துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.