1917 ஆம் ஆண்டு பாரதிதாசனால் தோற்றுவிக்கப்பட்ட புதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 11 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த 11 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் தமிழ்ச் சங்கத்திற்கான தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
வருகின்ற மூன்று ஆண்டுக்கான ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தமிழ் சங்கத்தில் தொடங்கியது.
தற்போதைய தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து தலைமையில் 11 பேரும், எதிர் தரப்பில் இரண்டு பேர் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 1,131 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி வழக்கறிஞர் பிரபாகரன் முன்னிலையில் வாக்குகளை பதிவு செய்தனர்.
ஒவ்வொரு உறுப்பினரும் 11 வாக்குகள் அளிக்க வேண்டும்.தமிழ்ச்சங்க தேர்தலை ஒட்டி பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“