மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது . துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினார்.
Advertisment
மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை பேசியதாவது; மீனவ சகோதரர்களுக்கு மற்றவர்களுக்கும் மத்திய அரசு திட்டங்களை கொடுக்கிறது. அதற்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது.
நேரடியாக வங்கி கணக்கில் சென்று விடுவதால் திட்டங்கள் கிடைக்கிறதா என்ற தகவல் கூட தெரியவில்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Advertisment
Advertisements
ஆனால், மீன் தான் முட்டை இட்டு, கண்கள் மூலமாக அடைகாத்து, கண்களை வைத்தே குஞ்சு பொரித்து, கண்களை வைத்தே தன் சந்ததிகளை வளர்க்கும். அதேபோல மத்திய மாநில அரசுகள் மீனைப் போல அரசு செயல்படுகிறது.
மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய்நொடி இல்லாமல் இருக்கலாம். ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டது. அப்போது மீன் உணவு சமைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் “நாங்கள் மீன் உணவை அசைவம் என்று நினைப்பது இல்லை. சைவம் என்று தான் நினைக்கிறோம்“ என்று குறிப்பிட்டார்கள். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள் என்று நினைக்கிறேன்.
புதுச்சேரி கடல் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. 60 கோடி ரூயாயில் பாலம் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டு அது இன்னும் கட்டப்படாமல் இருப்பதை பற்றி தெரிவித்தார்கள். அந்த பாலத்தின் வயது நூறு ஆண்டுகள். 1861 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம். 'சாகர்மாலா திட்டத்தின் ' மூலம் அந்த பாலத்தை சீர்படுத்தி சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் நிர்மானிப்பதற்கான திட்டம் பரிசீலனையில் இருப்பதால் அது உடனடியாக கட்டப்படவில்லை.
ரூ. 60 கோடி செலவில் உடைந்த பாலத்தை கட்டி தருவது சரியா? அல்லது உடைந்த பாலத்தை சீர்படுத்தி சரக்கு கப்பல்கள் வரும் அளவிற்கு மேம்படுத்துவது சரியா? என்பதுதான் கேள்வி.
ஆகவே, இங்கு எது தாமதப்படுத்தப்பட்டாலும் அது வரும்காலத்தில் பெரிய திட்டமாக மாற்றபடுவதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் மீனவர்களுக்கான ஓய்வூதியத் தொகை, மானியம், விடுமுறை ஊதியம் என்று பல திட்டங்கள் செயல் படுத்தப்படுவது மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு நீலப் புரட்சிக்காக கையெழுத்திட்டு இருக்கிறது.
வருங்கால சந்ததியினர் மீன்பிடித் துறையில் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டுமென்றால் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் துறை இன்னும் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
அரசு மக்கள் நலம் சார்ந்த அத்தனை திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நிச்சயமாக செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் ஏதாவது தாமதப்படுத்தப்பட்டால் அது தடை அல்ல. அதனை மேம்படுத்துவதற்கான முயற்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“