Advertisment

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான ஆசை.

author-image
WebDesk
New Update
Headline News in Tamil Live Updates, மும்மொழிக் கொள்கை, கஸ்தூரி ரங்கன் திட்டவரைவு

Tamilisai Soundararajan

மகளிர் இட ஒதுக்கீட்டால் புதுச்சேரி மாநிலத்தில் 11 பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆலச்குப்பம் அரசு  தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியை பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும். இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.

அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான ஆசை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment