Advertisment

புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்தில் உள்ள திருப்பதி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
railway Train

Puducherry

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக திருப்பதிக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்கள் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தெற்கு ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்தில் உள்ள திருப்பதி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லாத விரைவு ரயில் (வ.எண் 16870) வரும் மே 4-ஆம் தேதி வரையில் காட்பாடி, திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - திருப்பதி விரைவு ரயில் (வ.எண் 16112) திருச்சானூா், திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் மே 4-ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. ரயிலானது திருச்சானூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

எதிர் வழித் தடத்தில் திருப்பதியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயிலானது திருப்பதி, திருச்சானூா் இடையே வரும் மே 5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அந்த ரயில் திருச்சானூா் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.25 மணிக்குப் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment