தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி நகரப்பகுதியில் நவம்பர் 8 முதல் 12 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை வருகிற 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நகரப் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் நவம்பர் 12 வரை நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,மாலை 4 மணி முதல் புதுச்சேரி நகருக்குள் குறிப்பிட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் வரும் பேருந்துகள் நகரப் பகுதியில் சுற்றி செல்ல வேண்டும் மற்றும் புஸ்ஸி வீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் அனைத்து விதமான கனரக வாகனங்கள் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனத்தை பழைய சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ,இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“