புதுச்சேரியைச் சேர்ந்த சினோஜ், குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். இதற்காக அன்பு இல்லம் பெயரில் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை கண்டு அவர்களிடம் தொடர்பு கொண்டார். அவர்களும் சினோஜ்க்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை அனுப்பி, உங்களுக்கு இதில் எந்த குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
மேலும் அவர்களது பேஸ்புக்கில் அன்பு இல்லம், பல்வேறு குழந்தைகளை தத்துக் கொடுத்தது போன்ற புகைப்படங்களும் இருந்தது. இதை நம்பி சினோஜூம் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார்.
பிறகு அந்த இல்லம் சார்பில் தொடர்பு கொண்டவர்கள், பல்வேறு சட்ட நடவடிக்கைகள் இருக்கின்றது என்று கூறி, அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 7,000 ரூபாயை கடந்த ஒரு மாதமாக வாங்கி உள்ளனர்.
அதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சினோஜ் ஆன்லைன் வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரங்களையோ நம்பி பொருட்களை வாங்க பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களை இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“