பிரதமர் மோடி குறித்து பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். பாதுகாப்பிற்காக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் புதுவை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த புதுவை பல்கலைக்கழகத்தில் மோடி குறித்து பி.பி.சி நிறுவனம் வெளியிட்ட ஆவண படத்தை பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொதுவெளியில் திரையிடக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில் விடுதி அறைகளில் திரையிடப்படும் என அறிவித்தனர். அதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க முடியாது என அறிவித்தார் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: கோயில் நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த முடியாது – உயர் நீதிமன்றம்
இந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'India the Modi Question' என்ற ஆவணப் படத்தை பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ளே கூட பார்க்கின்றனர்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
இதே போன்று கேரளா மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாஹே பிராந்தியத்திலும் பி.பி.சி வெளியிட்ட மோடி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) சார்பில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். அதை அவர்களது பேஸ்புக் பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பாக இணைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் பி.பி.சி வெளியிட்ட மோடி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களில் ஒருவர் கூறுகையில்," முன்னதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் பி.பி.சி வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கவில்லை. மேலும் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் பல்கலைக்கழகம் முழுவதும் மின்சாரம் மற்றும் வைஃபை (wifi) இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்டர் கேட் அருகே சுமார் 300 மாணவர்கள் இணைந்து எங்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பி.பி.சி.,யின் ஆவணப்படத்தை பார்த்தோம்.
அப்போது ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த 10 பேர் எங்களுக்கு எதிராக ஜெய் ஸ்ரீ ராம், மோடி மோடி, சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியில் எங்களை பார்த்து சுட்டுக் தள்ளுங்கள் என்று கத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில் பல்கலைக்கழக தனியார் காவலர்கள் பாதுகாத்தனர். தற்போது மின் இணைப்பு வந்துள்ளது. ஆனால் இணைய வசதி வரவில்லை," என்று அந்த ஆராய்ச்சி மாணவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.