இந்த நேரத்துல ஆயிரம் பேர கூட்டி கல்யாணம் நடத்தனுமா? அதிரடி காட்டிய அதிகாரிகள்…

லைசென்ஸை ரத்து செய்ய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

puducherry wedding hall sealed aftere it hosted a wedding with 1000 guests

puducherry wedding hall sealed after it hosted a wedding with 1000 guests : கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. 50 பேருக்கு மேல் திருமண நிகழ்வில் பங்கேற்கவும், 20 பேருக்கு மேல் மரண நிகழ்வில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி 1000க்கும் மேற்பட்டவர்களை அழைத்து திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர்.

புதுவை ரெட்டியார்பாளையத்தில் அமைந்திருக்கும் மூலகுளம் லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் விசிக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த வருவாய் துறையினர் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் திருமணங்கள் நடத்துவதற்காக வழங்கப்பட்ட அதன் லைசென்ஸை ரத்து செய்ய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த திருமண நிகழ்வை நடத்திய விசிக பிரமுகர் மீது ரெட்டியார் பாளையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Puducherry wedding hall sealed after it hosted a wedding with 1000 guests

Next Story
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் 7.5% இட ஒதுக்கீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com