scorecardresearch

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

Puducherry
Puducherry

புதுவை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில்  மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து  கலால்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry women protests for closure of tasmac