என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில் அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான்.
அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகின்ற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது என் தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்..
கி.ராஜநாராயணன் என்னும் எழுத்தாளர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய எழுத்துக்கள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது இன்று நடந்த விழாவில் தெரிய வந்தது.
புதுவை பல்கலைக்கழகம், சுப்ரமணிய பாரதியார் தமிழ் மொழி மற்றும் இலக்கிய புலமும் கி.ரா அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்த கி.ரா நூற்றாண்டு நிறைவு விழா இன்று காலை ராம் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடந்தது.
விழாவில் இணை பேராசிரியர் கருணாநிதி வரவேற்றார். கி.ரா அறக்கட்டளை இளவேனில் அறிமுக உரை ஆற்றினார். பேராசிரியர் தரணிக்கரசு, இளைய பேராசிரியர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்
எழுத்தாளர் இமையன், பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் வெங்கடசுப்பு நாயக்கர் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இந்த நிகழ்ச்சியில் கரிசல் விருது பெற்ற கவிஞர் பழமலை பாராட்டி அறக்கட்டளை சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் நிதி வழங்கி பாராட்டினார்கள்.
இவ்விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையேற்று நடத்துவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் கனிமொழி தனது வாழ்த்து மடலை விழாவிற்கு அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“