திடீரென அறுந்த கயிறு... அப்படியே கவிழ்ந்த தேர்: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் மகாலிங்கம் (60) என்பவர் பரிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் மகாலிங்கம் (60) என்பவர் பரிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Pudukkottai Aranthangi Sri Muthumariamman temple chariot broke off man dies 6 injured Tamil News

தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகடுகாயம் அடைந்தனர்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சக்தி சரவணகுமார்  

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில,  தேரின் மேலே கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கயிறு அறுந்து கும்பம் தவறி விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம்( 60) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள மாத்தூர் ராமசாமி புரத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று மாலை விமர்சையாக நடைபெற இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்தன.

அப்போது  தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர்  படுகடுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அந்த கிராம மக்கள் மீட்டு அந்த கிராம மக்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது மகாலிங்கம் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். எஞ்சிய 4 பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Pudukottai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: