Pudukkottai collector Kavitha Ramu dance Bharathanatiyam at College function: புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி ஆண்டு விழாவில் ஆட்சியர் கவிதா ராமு பரத நாட்டியம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Advertisment
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் கவிதா ராமு. சிறப்பாக பணி செய்து வரும் கவிதா ராமு, பள்ளி கல்லூரி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் போட்டிகளில் பரிசு வென்றால் நேரில் அழைத்து பாராட்டியும் வருகிறார்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்துக்கொண்டார்.
Advertisment
Advertisements
அப்போது மேடை ஏறிய கவிதா ராமுவிடம் கல்லூரி மாணவர்கள் பரத நாட்டியம் ஆடச்சொல்லி வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்ற ஆட்சியர், யமுனை ஆற்றிலே… ஈரக் காற்றிலே என்ற பாடலுக்கு அற்புதமாக பரத நாட்டியம் ஆடினார். மாணவர்கள் உற்சாக கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். கவிதா ராமு முறைப்படி பரதநாட்டியம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த பரத நாட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.