வீடு எங்களுக்கு சொந்தம்; கடன் தவனை செலுத்த தவறியதால் அத்து மீறிய நிதி நிறுவன ஊழியர்கள்!

இந்த இடம் அடமானத்தில் உள்ளது, இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெயிண்டால் எழுதிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடம் அடமானத்தில் உள்ளது, இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெயிண்டால் எழுதிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Puduchk

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் சுவற்றில், இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும், வீடுகட்ட கடன் கொடுத்த நிதி நிறுவனமும் இந்த இடம் அடமானத்தில் உள்ளது, இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெயிண்டால் எழுதிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாலகிருஷ்ணனின் மகன்கள் முத்துக்குமார் இடத்தை வைத்து ஒரு நிதி நிறுவனத்திடமும், மற்றொரு மகன் சக்திவேல் வீடு கட்டுவதற்காக மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில், சில தவணைகள் பாக்கி உள்ளதால் வீட்டுக்கு வந்து வசூல் செய்ய முயன்றனர். பாலகிருஷ்ணன் வகையாரிடம் போதிய நிதி இல்லாததால் கடன் தொகையை தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நிதி வசூலிக்க வந்த அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவற்றில் மேற்கண்டவாறு தங்களது நிதி நிறுவனத்தின் பெயர்களை எழுதி இதுபோன்ற அத்துமீரல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த அத்துமீறல் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆனதால் காவல்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: