தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 16) முற்பகல் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 10 மாவட்ட ஆட்சியர்களை பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதில், உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர ஆணையராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 16) மாலை புதுக்கோட்டை, கடலூர்ல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மேலும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜவுளித்துறை ஆணயராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கெஜலட்சுமி பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.