கின்னஸ் சாதனையை ஏற்படுத்தும் முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கலையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் உலக சாதனை முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளத்தில் ஸ்ரீபட்டமரத்தான் கருப்புசாமி கோயில் விழா கமிட்டி சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (20.1.19) நடைபெற்று வருகிறது.
இதில் வேறு எங்கும் பங்கு பெறாத வகையில் அதிகளவில் சுமார் 2,000 காளைகள் கலந்து கொண்டுள்ளன. 500 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க உள்ளனர். இந்த போட்டியில் அதிக அளவிலான காளைகளை ஜல்லிக்கட்டில் இடம்பெறச் செய்து, உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருபுறமும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்துக்கு வெளியே ஜல்லிக்கட்டை பார்வையிட 4 இடங்களில் பெரிய அளவில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.
#விராலிமலை யில் மாபெரும் #ஜல்லிக்கட்டு திருவிழா ????????
உலக சாதனைக்கான மாபெரும் முயற்சி ????????நாள் : 20.01.2019 #viralimalai #Jallikattu
அனைவரும் வருக ???? pic.twitter.com/c1vEoghTaI
— Viralimalai Official (@viralimalaioffl) 19 January 2019
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கும் இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
வெற்றி பெறுவோருக்கு கார், இருசக்கர வாகனங்கள், டிவி, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றனர்.
ஏற்கனவே மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.