திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
திருச்சி ஆர்டிஓ தவச்செல்வன் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் 627 ஜல்லிக்கட்டு காலைகள் கலந்துகொண்டன. 297 மாடு பிடி வீரர்கள் 8 பேஜாக கலந்துகொண்டனர்.
ஜல்லிகட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் வீரர்களுக்கு சைக்கில், தங்கம், வெள்ளி காசு, சைக்கில், ரொக்கம், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
17 மாடுகளை அடக்கிய திருச்சி பெரிய சூரிய உரை சேர்ந்த பூபாலன் முதல் பரிசு பெற்றார் அவருக்கு இருசக்கர வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.
இரண்டாவது பரிசாக நவல்பட்டு சேர்ந்த ரஞ்சித் 14 காளைகளை அடக்கி உள்ளார் அவருக்கு என்ன பரிசு வழங்குவது என விழா கமிட்டி இறுதி முடிவு எடுக்கவில்லை அதேபோல் சிறந்த காலையும் அறிவிக்கவில்லை.
-
உயிரிழந்த அரவிந்த்
ஜல்லிகட்டு காளைகளை கால்நடை இணை இயக்குநர் மருதராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருந்து அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
மாடுகள் பாய்ந்ததில் பார்வையாளர்கள் இதில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 12 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் மாடு பாய்ந்ததில் ஜல்லிகட்டு கமிட்டி சேர்ந்த சம்பத் (29), பார்வையாளர்கள் வேங்கூரை சேர்ந்த நிவாஸ் குமார் (28), களமாவூர் அரவிந்த் (25), கள்ளிக்குடி கோபி ( 27 ), சன்னாச்சி பட்டி ராஜேந்திரன் (59), வீரப்பட்டி கார்த்திக் (20), கோவிலடி தனுஷ் (19),கீரனூர், ஸ்டீபன் ராஜ் (22), கண்ணாங்குடி பழனி (14), மாட்டின் உரிமையாளர்கள் சப்பானிப்பட்டி சரத்குமார் (24), எட்டுகல் பட்டி செல்லமுத்து (35) உட்பட 12பேர் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளின் உரிமையாளர்கள் 17, விழா கமிட்டி ஒருவர், மாடுபிடி வீரர் 9 உட்பட 63 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.
.இதில் புதுக்கோட்டை களமாஊரை சேர்ந்த ஜேசிபி ஆப்ரேட்டர் அரவிந்த் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/