புகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’

Pugazhendhi demands to resignation of TTV Dinakaran: கடந்த மாதம் அமமுக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி, அவரது கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்…

By: Updated: October 6, 2019, 04:06:20 PM

Pugazhendhi demands to resignation of TTV Dinakaran: அண்மையில், அமமுக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி, அவரது கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைப் பற்றி விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரது கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

அமமுகவின் கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி. இவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெறுக்கமாக இருந்துவந்தார். கடந்த மாதம் புதுச்சேரியிலிருந்து அமமுக நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச் செயலாளரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். புகழேந்தி அவர்களிடம் டிவிவி தினகரனை பற்றி விமர்சித்துப் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அமமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை மட்னல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் புகழேந்தி தலைமையில் அமமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், 18 எம்.எல்.ஏ-க்கள் பதவி இழக்க காரணமாக இருந்த டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். மேலும், வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது அமமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது; நமது கனவு பொய்த்துவிட்டது. இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது; இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் யாரிடம் விலைபோனார் தினகரன். அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்னை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் ” என்று என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக புகழேந்தி இவ்வாறு பேசியுள்ளதால் அமமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Pugazhendhi demands to resignation of ammk general secretory ttv dinakaran

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X