கோவை, கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவில் செயல்படும் ஒரு தனியார் பம்ப் கம்பெனியில், யாசகம் கேட்பது போல் வந்த வடமாநிலப் பெண்கள், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கம்பெனி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏழு வடமாநிலப் பெண்கள் பிச்சை எடுப்பது போல் வந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதிவான சி.சி.டி.வி காட்சிகளில், திருட்டில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர், நிறுவனத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ஃபினாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் சுற்றித் திரிந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கோவை காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.