ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18ஆம் தேதியன்று) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
மாநிலத்தில் முதலீடு செய்ய தொழில்துறை ஜாம்பவான்களை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வந்த பஞ்சாப் முதல்வர், இன்று (திங்கட்கிழமை) வணிக பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களை சந்தித்து முதலீடுகள் மற்றும் முக்கிய துறைகளிடம் கலந்துரையாட உள்ளார்.
நாளை (செவ்வாய்கிழமை) ஹைதராபாத்தில் தொழில்துறை தலைவர்களை பஞ்சாப் முதல்வர் சந்திக்கவுள்ளார்.
"முதலமைச்சரின் இந்த இரண்டு நாள் பயணம், பெரிய முதலீடுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் பெரிய நிறுவனங்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை கற்பித்து மாநிலங்களுக்கு பயனளிக்கக்கூடும்", என்று பஞ்சாப் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 23-24 தேதிகளில் மொஹாலியில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள முதலீட்டு மாநாட்டிற்கு தொழில்துறையினர்கள் வருகைதருமாறு பஞ்சாப் முதல்வர் அழைப்பு விடுக்கிறார். இதற்கிடையில், மாநிலத்தை ஒரு தொழில்துறை மையமாக மாற்றுவதற்கான தனது முடிவை மீண்டும் வலியுறுத்தினார் பகவந்த் மான்.
அந்த அறிக்கையின்படி, தொழில்துறை வளர்ச்சியின் உயர் வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை நிலைநிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாட்டின் பெரிய தொழில் மையங்களுக்கான தனது சுற்றுப்பயணம், ஒருபுறம் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் என்றும், மறுபுறம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் முதல்வர் கருதினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil